Thursday, 19 June 2014

மனம்

நீ
வெட்கப்பட்டாலும்
எனக்கு தெரியும்!
வேதனைப்பட்டாலும்
எனக்கு தெரியும்!

என்னிடம்
எதுவும்
மறைக்க முடியாது
என
மார்தட்டிக்  கொண்டது!

மனம்.....

Tuesday, 10 June 2014

ஆசை ராசாவே...

கறுத்த மேகம்
பூமியில் தெரிந்தது
மாமா முகம்...

Monday, 9 June 2014

ஏன் இந்த மாற்றம்?

கருத்தரித்தது
அம்மாவின்
வயிற்றில்!

பிறந்தது
ஆஸ்தியை ஆளும்
ஆணாக!

வளர்ந்தது
உணர்வுகள் 
மீறிய
பெண்ணாக!

இறுதியில்
வாழ்வை
தொடங்கியது...

சமுதாயத்தில்
ஒதுக்கி
தள்ளப்படும்
திருநங்கையாக!!!

Thursday, 5 June 2014

சாலை

கள்ளைக்
குடித்தவன்போல்
தாறுமாறாக
செல்கிறாய்....

எப்பொழுதும்
இப்படி
வீழ்ந்தே
கிடக்கின்றாய்...












உன்னை
தூக்கிச் செல்ல
உறவினர்கள்
யாரும்
இல்லையோ?

வாழ்வில் 
என்ன 
மயக்கமா?
கலக்கமா?

Tuesday, 3 June 2014

இரு! இருக்காதே!

பெற்றோரிடத்தில்
அன்பாய் இரு!
ஆத்திரமாய் இருக்காதே!

ஆசிரியரிடத்தில்
பண்பாய் இரு!
பக்கிரித்தனமாய் இருக்காதே!

கடவுளிடத்தில்
பக்தியாய் இரு!
படாடோபமாய் இருக்காதே!

நண்பனிடத்தில்
உண்மையாய் இரு!
ஊதாரியாய் இருக்காதே!

உறவினரிடத்தில்
பாலமாய் இரு!
பரிதாபமாய் இருக்காதே!


உன்னிடத்தில்
உறுதியாய் இரு!
    ஊமையாய் இருக்காதே!