Tuesday 27 May 2014

படிக்க!படிக்க!


வார்த்தையை
வசப்படுத்த
ஊட்டச்சத்து
தந்தாள்
வகுப்பறையில்
பாடம் வாசிக்க....
வசப்பட்டப்பின்
வார்த்தை விளையாட்டை
கற்றுக்கொடுத்தாள்
மேடையில்
வாதம் சுவாசிக்க...

யார் இவள்?

அம்மா என்றால்
அன்பு தான்!

ஆசிரியர் என்றால்
ஒழுக்கம் தான்!

தோழி என்றால்
அனுசரிப்பு தான்!

இவர்களுக்கும்
ஒசந்தவள்....

என்
தமிழ் மொழியாள்! கருந்தமிழி!




1 comment:

  1. அம்மா ஆசிரியர் தோழியாக மற்றும் இவர்கள் மூவருக்கும் ஒசந்த கருந்தமிழி (புதிய சொல்லாக்கமா? நல்லாருக்கு) நல்ல படைப்பு தொடர்ந்து எழுதுங்கள். தொடர்வோர் பட்டியலை இணைப்பதுடன் மற்ற நம் நட்பு வலைகளுக்கும் சென்று கருத்திடுவதன் வழியாக அறிமுகம் கிடைக்கும் பயன்படுத்தி எழுதி எழுதி மேற்செல்லலாம்.

    ReplyDelete