Thursday, 19 June 2014

மனம்

நீ
வெட்கப்பட்டாலும்
எனக்கு தெரியும்!
வேதனைப்பட்டாலும்
எனக்கு தெரியும்!

என்னிடம்
எதுவும்
மறைக்க முடியாது
என
மார்தட்டிக்  கொண்டது!

மனம்.....

Tuesday, 10 June 2014

ஆசை ராசாவே...

கறுத்த மேகம்
பூமியில் தெரிந்தது
மாமா முகம்...

Monday, 9 June 2014

ஏன் இந்த மாற்றம்?

கருத்தரித்தது
அம்மாவின்
வயிற்றில்!

பிறந்தது
ஆஸ்தியை ஆளும்
ஆணாக!

வளர்ந்தது
உணர்வுகள் 
மீறிய
பெண்ணாக!

இறுதியில்
வாழ்வை
தொடங்கியது...

சமுதாயத்தில்
ஒதுக்கி
தள்ளப்படும்
திருநங்கையாக!!!

Thursday, 5 June 2014

சாலை

கள்ளைக்
குடித்தவன்போல்
தாறுமாறாக
செல்கிறாய்....

எப்பொழுதும்
இப்படி
வீழ்ந்தே
கிடக்கின்றாய்...












உன்னை
தூக்கிச் செல்ல
உறவினர்கள்
யாரும்
இல்லையோ?

வாழ்வில் 
என்ன 
மயக்கமா?
கலக்கமா?

Tuesday, 3 June 2014

இரு! இருக்காதே!

பெற்றோரிடத்தில்
அன்பாய் இரு!
ஆத்திரமாய் இருக்காதே!

ஆசிரியரிடத்தில்
பண்பாய் இரு!
பக்கிரித்தனமாய் இருக்காதே!

கடவுளிடத்தில்
பக்தியாய் இரு!
படாடோபமாய் இருக்காதே!

நண்பனிடத்தில்
உண்மையாய் இரு!
ஊதாரியாய் இருக்காதே!

உறவினரிடத்தில்
பாலமாய் இரு!
பரிதாபமாய் இருக்காதே!


உன்னிடத்தில்
உறுதியாய் இரு!
    ஊமையாய் இருக்காதே!

Saturday, 31 May 2014

விடாமுயற்சி

vj;jid Kiw
tPo;e;jhYk;
kWgbAk;
vOe;J tUNtd;
Muthuj;Jld;
cw;rhfkhf.













kiyaUtp

Friday, 30 May 2014

இம்சை அரசன்

காலம் 
நேரம்
தெரியாது
இவனுக்கு...

நிம்மதியாக
துாங்கவிடமாட்டான்!
பேசவிடமாட்டான்!

பிறர்
யார் இவன்?
என்று
கேட்பதற்கு
முன்பே
தன்னை
அறிமுகம்
செய்து கொள்வான்!

”லொக்குலொக்கு”
என்ற
பட்டப்பெயரை
முடிசூட்டிக் கொண்டவன்!

அவனே..............

இம்சை அரசன்
இருமல்காரன்!!!

Tuesday, 27 May 2014

படிக்க!படிக்க!


வார்த்தையை
வசப்படுத்த
ஊட்டச்சத்து
தந்தாள்
வகுப்பறையில்
பாடம் வாசிக்க....
வசப்பட்டப்பின்
வார்த்தை விளையாட்டை
கற்றுக்கொடுத்தாள்
மேடையில்
வாதம் சுவாசிக்க...

யார் இவள்?

அம்மா என்றால்
அன்பு தான்!

ஆசிரியர் என்றால்
ஒழுக்கம் தான்!

தோழி என்றால்
அனுசரிப்பு தான்!

இவர்களுக்கும்
ஒசந்தவள்....

என்
தமிழ் மொழியாள்! கருந்தமிழி!




Monday, 26 May 2014

ஞாபகங்கள்

பேசி
விட்டு சென்ற
வார்த்தைகளின்
பரிணாம வளர்ச்சி !

Saturday, 24 May 2014

செய்முறை

கணக்கு
பாடத்தை
பார்த்தால்
புரியவில்லை
எனக்கு...



கணக்கு பண்ணி
பார்த்தால்
புரிகிறது
கணக்கு!

சுருட்டு

தவறு 
என்று தெரிந்தும்
தவறாமல்
பிடிக்கிறேன்







ரகசியமாக
சுருட்டை.....